ரோட்டோர பள்ளத்தில் பைக்குடன் பாய்ந்த இளைஞர்... பதறிய வாகனஓட்டிகள் -ஷாக் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திறந்து கிடந்த பள்ளத்தில் பைக்குடன் விழுந்த இளைஞரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சப்தம் கேட்டு ஓடி வந்தவர்கள், இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் திறந்து கிடந்ததே விபத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், இது போன்ற பணியின் போது, அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.