டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்..! கோபத்தில் மக்கள்! நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் | Tirunelveli
திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் பழவூர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது பற்றிய புகார் தொடர்பாக BNS 271, 272 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் அந்த கழிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தவும், தகுந்த முறையில் கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காவல்துறையால் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் இழைத்தவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.