``மக்களிடையே பிரிவினை..'' - பாதிரியாருக்கு எதிராக திரண்ட மக்கள் - குமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, தேவாலய பங்குத் தந்தையை இடமாற்றம் செய்யக்கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசாரிபள்ளம் தேவாலயத்தின் பங்குத்தந்தையாக உள்ள சுதர்சன், ஆலயத்திற்கு வரும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. சுதர்சனை இடமாற்றம் செய்யக்கோரி, கோட்டார் மறை மாவட்ட கத்தோலிக்க ஆயரிடம் மக்கள் மனு அளித்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், கோட்டார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.