தட்டிக்கேட்ட போலீசுக்கு அடி.. ஓடிவந்து வெளுத்த பப்ளிக் - சென்னையை அதிர வைத்த போதை`கை'

Update: 2024-12-17 16:01 GMT

ஆவடி போக்குவரத்து பிரிவு காலரான செல்லபாண்டி, திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் அருகே போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த பொதுமக்கள், சிறிது தூரத்தில் கார் ஒன்று சாலையின் நடுவே இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து காவலர் செல்லபாண்டி அங்கு சென்று பார்த்தபோது, காருக்குள் 3 இளைஞர்கள் போதையில் உறக்க நிலையில் இருப்பது தெரியவந்தது. அவர்களை எழுப்பி விசாரித்தபோது, காரின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த பசுபதி என்ற இளைஞர், காவலர் செல்லபாண்டியிடன் வாக்குவாதம் செய்து, சட்டையை பிடித்து காருக்குள் இழுத்து தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் கழுத்தில் காயம் அடைந்த காவலர் செல்லபாண்டியை, சக காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றர். இதையடுத்து, காரில் இருந்த மூவரில் ஒருவர் தப்பி விட்டதால், பசுபதி உள்ளிட்ட இருவரை காருடன் பிடித்த போலீசார், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்