பருப்பு வடை கேட்டவருக்கு... பூரான் வடை கொடுத்த கடைக்காரர்... இறுதியில் அரங்கேறிய சம்பவம்
திண்டுக்கல் மவட்டம் நிலக்கோட்டையில் உள்ள தேநீர் கடை ஒன்றில், அக்கரகாரப்பட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் 7 வடைகளை வாங்கி உறவினர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது, வடையில் இறந்தநிலையில் பூரான் இருந்தது கண்டு வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுதொடர்பாக தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இந்நிலையில், தேநீர் கடையை ஆய்வு செய்த வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா, மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க கூடாது என கூறி, கடைக்கு சீல் வைத்தார். மேலும் கடை உரிமையாளர் ஒளி முகமதுவிற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.