அரசு மருத்துவமனை முன்பு நோயாளிகள் சாலை மறியல் - பரபரப்பு

Update: 2024-12-17 16:20 GMT

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், வாரந்தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் ஸ்கேன் பரிசோதனை செய்ய நோயாளிகள் சென்ற நிலையில், ஸ்கேன் செய்யும் மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவதியடைந்த நோயாளிகள், அவர்களது உறவினர்களுடன் சேர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த போலீசார், நோயாளிகளிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்