"ஆண்டுதோறும் ஒரே பிரச்சனை... இதற்கு தீர்வு இது தான்" - மக்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை
ஆண்டுதோறும் ஒரே பிரச்சனை... இதற்கு தீர்வு இது தான்" - மக்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை
ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு நிரந்த தீர்வு காணும் வகையில், திருச்செங்கோட்டை அடுத்த கொன்னையாறு பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமணிமுத்தாற்றில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் வீட்டிற்கு தண்ணீர் புகுந்து வருவதாக கொன்னையாறு பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். தரைப்பாலம் அடைத்து கொள்வதால் தண்ணீர் ஊருக்குள் வந்து விடுவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண தரைப் பாலத்தை உயர்மட்ட பாலமாக உயர்த்தி தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருமணிமுத்தாறில் சட்டவிரோதமாக சாய கழிவுகள் கலக்கப்படுவதால் நிலத்தடி நீர் மாசவடைவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.