"3 மாதம் சுயநினைவு இல்லாமல் இருந்தேன்" -"சட்டுன்னு வந்து வெட்டுச்சு"-பெண் சொன்ன அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-08-28 01:48 GMT

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை திரைப்படம், அவரது ஊரில் நடந்த லாரி விபத்தில் 19 பேர் உயிரிழந்ததை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிக் கொண்டு உயிர்தப்பிய பனிமாலா என்ற பெண், 2 கால்களை இழந்த நிலையில் நாட்டார்குளத்தில் வசித்து வருகிறார். இதுகுறித்து பேசிய பனிமாலா, உண்மை சம்பவத்தை அப்படியே படமாக எடுத்திருப்பதாகவும், 2 கால்களை இழந்த பின் 3 மாதங்கள் சுயநினைவின்றி கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்தின் மூலம் 21 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே நிதியுதவி கிடைத்ததாகவும் பனிமாலா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்