தாயின் 2 கைகளை வெட்டிய கொடூரன்... வெறும் 8 மணிநேரத்தில் இணைத்து... அரசு மருத்துவர்கள் சாதனை

Update: 2024-12-23 13:49 GMT

சென்னையில் கத்தியால் வெட்டப்பட்டு இரு கைகளும் துண்டான பெண்ணின் கையை 8 மணி நேரத்தில் இணைத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.கண்ணகி நகரை சேர்ந்த 23 வயது இளைஞர், குடும்ப தகராறில் தனது, தாயின் இரண்டு கை மணிக்கட்டுகளிலும் வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் அவரது இடது கை மணிக்கட்டு, கிட்டத்தட்ட மொத்தமாக துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் 8 மணி நேரம் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து, கை மணிக்கட்டை வெற்றிகரமாக இணைத்து சாதனை படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்