தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, நாளை முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.