"சாலை சீரமைப்பில் மெத்தனம் காட்டிய அதிகாரிகள் - பொங்கியெழுந்த பொதுமக்கள்" | Kanyakumari | Thanthi TV
கன்னியாகுமரியில் சேதமடைந்து காணப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை, தற்காலிகமாக சீரமைக்க சென்ற அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படந்தாலுமூடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பல மாதங்களாக சேதமடைந்து காணப்படும் நிலையில், 19 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியும், சாலையை சீரமைக்க அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், குமரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவுள்ளதையொட்டி, நெடுஞ்சாலை துறையினர் சாலையை தற்காலிகமாக சீரமைக்க வந்ததாக தெரிகிறது. அப்போது, வாகனங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, எம்.எல்.ஏ தாரகை கத்பட் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.