"தவெகவில் இருந்து விலகப்போறேன்"-னு சொல்லிட்டு அப்படியே அந்தர்பல்டி அடித்த மகளிரணி நிர்வாகி

Update: 2024-12-23 13:24 GMT

தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து விலகுவதாகக்கூறிய பெண் நிர்வாகி, மீண்டும் கட்சியில் இணைந்து கொடியேற்றியதால் பரபரப்பு நிலவியது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கார்க்குடி காலனி தெருவை சேர்ந்த பிரியதர்ஷினி, த.வெ.க மகளிர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், மகளிர்க்கு உரிய மரியாதை தரவில்லை என குற்றம் சாட்டி, கட்சிக்கொடியை இறக்கி விலகுவதாக அறிவித்தார். த.வெ.க. மாவட்ட நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மீண்டும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, கொடியை ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியதர்ஷினி, சில முரண்பாடுகளால் கட்சிக்கொடியை இறக்கியதாகவும், கட்சியில் இருந்து வெளியேறுவதாக தான் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்