பெண் குளிப்பதை எட்டி பார்த்த நபருக்கு 15 மாதம் சிறை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தூத்துகுக்குடி மாவட்டம், நாசரேத் அருகே மாற்றுத் திறனாளி பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த நபருக்கு 15 மாதம் சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த பெண் அளித்த புகாரின் பேரில், மார்ட்டின் என்கிற ஜெபஸ்டின் மீது நாசரேத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்த சாத்தான்குளன் நீதிமன்றம், மார்ட்டினுக்கு 15 மாதம் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும், அந்த தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.