சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

Update: 2025-03-27 01:55 GMT

விழுப்புரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வன் சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி

உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு, ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர், 30 லட்சம் நிநியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்