தெரு நாய்களை அடித்துக் கொன்ற மர்ம நபர்கள் - அதிர்ச்சி

x

திருவாரூரில் மர்ம நபர்கள் சிலர் தெரு நாய்களை அடித்துக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் நகரிந் முக்கிய பகுதிகளில் இரவு நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட மர்மநபர்கள் 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை அடித்து கொலைசெய்து ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், விலங்குகள் நலஆர்வலர்கள் திருவாரூர் நகர காவல்நிலையத்தில் நாய்களை கொடூரமாக தாத்திய மர்மநபர்களை கைது செய்யக்கோரி புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்