தமிழகத்தின் கோர விபத்தை தவிர்த்த ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது

Update: 2024-12-18 04:28 GMT

தமிழகத்தின் கோர விபத்தை தவிர்த்த ரயில்வே ஊழியருக்கு தேசிய விருது

தூத்துக்குடி வெள்ளத்தின் போது செந்தூர் விரைவு ரயிலை நிறுத்தி பெரும் விபத்தைத் தடுத்ததற்காக ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு மத்திய அரசின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் தேசிய அளவில் "அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்" என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இந்திய அளவில் 100 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தெற்கு ரயில்வேயை சேர்ந்த 6 ஊழியர்கள் மற்றும் 2 ரயில்வே அதிகாரிகள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை கோட்டத்தில் முதுநிலை மண்டல மின்பொறியாளர் மஞ்சுநாத் யாதவ் மற்றும் நிலைய கண்காணிப்பாளர் ஜாபீர்

அலி ஆகியோருக்கும் தேசிய விருது வழங்கப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவில்

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்க உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்