ஸ்கூல் வேனில் இருந்த எமன்..அக்காவை பார்த்தவுடன் ஓடிய தம்பி துடிதுடித்து பலி -திருப்பூரில் அதிர்ச்சி

Update: 2024-12-18 06:30 GMT

ஸ்கூல் வேனில் இருந்த எமன்..அக்காவை பார்த்தவுடன் ஓடிய தம்பி துடிதுடித்து பலி - திருப்பூரில் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, தனியார் பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காட்டம்மன் புதூரை சேர்ந்த தம்பதி பாலசுப்பிரமணி - மஞ்சுளா தேவி. இவர்களுக்கு 6 வயதில் தியா என்ற மகளும், 3 வயதில் ஆதி ஈஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். 6 வயது மகள் தியா, பள்ளி முடிந்தபின், தனியார் பள்ளி வாகனத்தில் வந்துள்ளார். அவரை கூட்டி வருவதற்காக 3 வயது மகன் ஆதி ஈஸ்வரனை திண்ணையில் இறக்கி விட்டுவிட்டு, தாய் மஞ்சுளா தேவி சென்றுள்ளார். தாய் சென்ற சிறிது நேரத்தில் 3 வயது மகன் ஆதி ஈஸ்வரன், அக்கா வந்த தனியார் பள்ளி வாகனத்தை நோக்கி ஓடியுள்ளார். இதில் தனியார் பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் படுகாயமடைந்தார். சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளியின் வாகன ஓட்டுநர் சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்