பள்ளிக் குழந்தைகளுக்கு மீண்டும் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக, பிரதமர் மோடி அரசு வழங்கும் நிதி, எங்கு செல்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி, குழந்தைகள் உயிருடன் விளையாடிக் கொண்டிருப்பதை, அமைச்சர் கீதா ஜீவன் உணர வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். இனியும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்க தவறினால், அரசுக்கு, பெற்றோர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறியுள்ளார்.