வடிவேலு பாணியை நிஜத்தில் யூஸ் செய்த நபர்... பரபரப்பு காட்சிகள்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமச்சந்திரபட்டணம் பேருந்து நிறுத்தம் பகுதியில், நெடுஞ்சாலை தடுப்புகளுக்கு இடையே இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த இடைவெளி வழியாக அப்பகுதி மக்கள் சாலையின் மறுபுறம் சென்று வந்தனர். சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு இந்த இடைவெளியை அடைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில், ஒருவர் வடிவேலு பாணியில் படுத்துக்கொண்டே போராட்டம் நடத்தினார். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.