தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகளை வைத்து மக்கள் அவரை முடிவு செய்வார்கள் என்று திரைப்பட இயக்குநர் அமீர் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு தமிழ் திரையுலகம் ஆதரவு தெரிவிக்குமா என்ற கேள்விக்கு தான் ஜோசியம் கூற முடியாது என்றார். இதுவரை இரண்டு முறை மக்களை சந்தித்துள்ள விஜய்யை, அவருடைய செயல்பாடுகளை வைத்து மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் கட்சியின் தலைவர் பலவீனமடைய கூடாது என்பதற்காகத்தான், ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் தாம் கருத்து தெரிவித்த தாகவும் அவர் கூறினார்.