நிறைவடைந்த தீபத் திருவிழா - அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜை

Update: 2025-01-03 15:31 GMT

திருவண்ணாமலையில் கடந்த 13ம் தேதி அண்ணாமலையார் மலையின் மீது ஏற்றப்பட்ட மகா தீபம், 11 நாட்கள் காட்சியளித்தது. பின்னர் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜை செய்யப்பட்டுள்ளது. தீப திருவிழாவின் போது மலையின் மீது பக்தர்கள் சென்று வந்ததாலும், பக்தர்களின் காலடி தடத்தினால் எழுந்த தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும் அண்ணாமலையார் மலையின் மீதுள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பரிகார பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அண்ணாமலையார் கோவில் கருவறையில் புனித நீர் கொண்ட கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்களால் புனித நீர் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்