மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை மீன் - குவிந்த அசைவ பிரியர்கள்.. என்ன மீன் தெரியுமா?
சிதம்பரம் அருகே மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் கொண்ட குளிரி வகை மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அன்னங்கோவில் மீன்பிடி துறைமுகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் மீன் வாங்க குவிந்தனர். அவர்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர். குறிப்பாக மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் வாய்ந்த குளிரி வகை மீன்கள் அதிக அளவு கிடைத்திருந்தது. இந்த குளிரி வகை மீன்கள் ஒரு கிலோ ரூபாய் 250 முதல் 300 ரூபாய் வரை விலை போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.