3-in-1... நாளை முதல் அதிரடி மாற்றம்... வந்திச்சு மேஜிக் கார்டு... சென்னைவாசிகளே ரெடியா..?

Update: 2025-01-05 13:09 GMT

சென்னை பயணிகள் எளிமையாக பயணிக்கும் விதமாக, ஒரே ஸ்மார்ட் கார்டு அட்டை கொண்டு வரப்பட்டது. பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் என பொது போக்குவரத்தில் எளிதில் பயணம் செய்யும் விதமாக கொண்டு வரப்பட்ட 'சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம் தற்போது மெட்ரோ ரயில் சேவையில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக மாநகர பேருந்துகளில் இந்த அட்டையை பயன்படுத்தும் விதமாக, வைப்பிங் மெஷின் கொடுக்கப்பட்டு நாளை முதல் பரிவர்த்தனை தொடங்க உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பல்லவன் பணிமனையில் மாநகர பேருந்துகளில் ஸ்மார்டு அட்டை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, மின்சார ரயில்களில் பயன்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்