கலெக்டருக்கே அதிகாரத்தை காட்டிய போலீஸ்.. தி.மலை மகாதீபத்தில் அதிர்ச்சி - தீயாய் பரவும் வீடியோ
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம், காவல் துறையினர் தங்களது அதிகாரத்தை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில், மாட வீதிகளுக்கான சாலைகள் போலீசாரால் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதியுற்றனர். இந்நிலையில் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சென்ற, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை உள்ளே விடாமல் போலீசார் தடுத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு இல்லாத அதிகாரத்தை காவல் துறையினருக்கு யார் கொடுத்தது என, வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு மாவட்ட ஆட்சியர் போலீசாரை கடிந்து கொண்ட நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, காவல் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வே