"எங்களை நிப்பாட்ட யாரு அதிகாரம் குடுத்தா.."கலெக்டரை உள்ளே விடாத காவல் துறை..தொற்றிய பரபரப்பு

Update: 2024-12-15 05:26 GMT

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சென்ற, ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை உள்ளே விடாமல் போலீசார் தடுத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு இல்லாத அதிகாரத்தை காவல் துறையினருக்கு யார் கொடுத்தது என, வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு ஆட்சியர் போலீசாரை கடிந்து கொண்ட நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, காவல் துறையினர் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்