சமையல் செய்த மும்முரத்தில் குழந்தையை பறிகொடுத்த தாய்.. தாய்மார்களே ஜாக்கிரதை.. இப்படியும் நடக்கலாம்
சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த வினோத், மோனிஷா தம்பதிக்கு 3 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் தர்னீஸ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். வினோத்தின் மனைவி, வீட்டில் சமையல் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த தர்னீஸ், வீட்டை விட்டு வெளியே சென்றதை கவனிக்கவில்லை. வீட்டின் முன்பு தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்த தர்னீஸ், வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்டான். வெகுநேரமாகியும் தர்னீஸ் காணாத நிலையில், மோனிஷா உள்ளிட்டோர் தேடியபோது, குழந்தை வாய்க்காலில் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், குழந்தையை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.