சென்னை பாலத்துக்கு கீழே கட்டுங்கடங்காத வெள்ளம் - கயிறு கட்டி காப்பாற்றிய வீடியோ தீயாய் வைரல்
சென்னை குன்றத்தூரில் வெள்ள நீரில் அடித்து செல்லாமல் இருக்க, மின் கம்பத்தை கயிறு போட்டு கட்டி வைத்திருந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் மேம்பாலத்தின் கீழ் வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. வெள்ள நீர் செல்லக்கூடிய பாதையில் மின் கம்பங்கள் உள்ளதால், அவைகள் அடித்து செல்லாமல் இருப்பதற்காக மின்வாரிய ஊழியர்கள், மின்கம்பத்தை பெரிய அளவிலான கயிறு கொண்டு, மேம்பாலத்தின் தூணில் கட்டி வைத்துள்ளனர்.