செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு ஏன்? - அமைச்சர் பரபரப்பு விளக்கம்

Update: 2024-12-15 05:35 GMT

செம்பரம்பாக்கம் ஏரியில் நீரை குறைக்காவிட்டால், கரை உடைந்து ஆபத்து ஏற்படும் என்பதால் தண்ணீர் திறந்து விடப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் ஆற்றோரம் வசிக்கும் முதியவர்களுக்கு அரிசி, பெட்ஷீட் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் பேசிய அவர், ஏரிகளை திறப்பதில் முதலமைச்சர் மிகவும் கவனமாக இருப்பதாகவும், கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சம்பவத்தை யாரும் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடி உயரத்தில், 23.42 அடி உயரம் தண்ணீர் நிரம்பியுள்ளதாகவும், ஏரிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வருவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார்.

வருகிற 17-ம் தேதி பெரிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீரை குறைக்காவிட்டால், கரை உடைந்து ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார். நீரை குறைப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு 22 அடியாக குறைந்து விடும் என்றும், 17ம் தேதி மழை வந்தால் 2 அடி உள்வாங்கி குடிநீருக்கு நிரம்பி இருக்கும் - இதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்