ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட பைகள் - திரண்ட மக்கள்.. திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி

Update: 2025-03-25 05:00 GMT

திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு அருகே, ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட பையில் 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திரா வழியே சென்னை வந்த ரயிலில் இருந்து, 3 பைகளை மர்ம நபர்கள் வெளியே வீசியுள்ளனர். அப்போது தண்டவாளம் அருகே தயாராக நின்றிருந்த நபர்கள் அந்த பைகளை எடுத்துள்ளனர். இதை பார்த்து பொதுமக்கள் அங்கு திரண்ட நிலையில், 2 பைகளை எடுத்து கொண்டு அந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. தகவல் அறிந்து வந்து போலீசார் பையை பிரித்து பார்த்ததில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்