வான்டடாக வந்து போலீஸ் சிக்கிய நபர்..மாட்டியதும் ஸ்டேஷனிலேயே வைத்து செய்த காரியம் | Police

Update: 2024-12-09 11:54 GMT

திருவள்ளூர் மாவட்ட போலீசார் திருத்தணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற சூர்யா உட்பட இருவரைக் கைது செய்தனர். அவர்களின் செல்போனை சோதனை செய்த போது அதில் வெடி மருந்தைத் தயாரித்து அதனை வெடிக்கச் செய்யும் வீடியோ இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்த அந்த வீடியோவில் இருந்த சஞ்சய்குமார் என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் யூட்யூபை பார்த்து வெடி மருந்து தயாரித்ததாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.இதனைத் தொடர்ந்து சஞ்சய் குமார் உட்பட ஆறு பேரை நீதிமன்றத்திற்கு அழைத்த செல்ல தயாரான போது, காவல் நிலையத்தில் இருந்த ஸ்டேப்ளர் பின்னை எடுத்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சஞ்சய்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்