தங்கள் எச்சியை குழந்தைகளிடம் கழுவ சொன்ன ஆசிரியர்கள் - வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சிகள்
கொத்துர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 96 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மத்திய உணவு இடைவெளியில் பள்ளி ஆசிரியை தாரணி என்பவர் மத்திய உணவு சாப்பிட்டு விட்டு,டிபன் பாக்ஸ்களை 2 வகுப்பு படிக்கும் குழந்தைகளை அழைத்து கழுவி வரும்படி கூறியுள்ளார். அதே பள்ளியில் பணியாற்றும் ஞானசேகரன் என்ற ஆசிரியரின் டிபன் பாக்ஸ்களையும் கழுவ சொன்னதாக கூறப்படுகிறது. பள்ளி குழந்தைகள் ஆரியர்களின் பாத்திரங்களை கழுவும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை வேலை வாங்கும் இந்த செயல் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.