திருச்செந்தூர் பக்தர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

Update: 2024-12-16 01:40 GMT

திருச்செந்தூரில் இருந்து போக்குவரத்து சேவை தொடங்கிய நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளியூர் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த இரு தினங்களாக பெய்த மழையால், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், திருச்செந்தூர் கோவிலுக்கு வருவதை வெளியூர் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தி இருந்தது. தற்போது மழை இல்லாத காரணத்தால், வழக்கம்போல திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து போக்குவரத்து சேவை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளியூர் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்