நிவாரணம் கொடுக்க வந்த MLAவுக்கு ஷாக்.. சுத்து போட்டு கேள்வியால் துளைத்தெடுத்த மக்கள்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தில் அமைந்துள்ள பழவேற்காடு செல்லும் சாலையானது ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்டது. தற்காலிக தீர்வாக அப்பகுதி மக்களுக்கு படகு சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது எம்எல்ஏவை முற்றுகையிட்ட பெண்கள் தங்களது கிராமத்திற்கு மேம்பாலம் கட்டி கொடுத்து பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என முறையிட்டனர்.