கள்ளர் வெட்டு திருவிழா கோலாகலம் - போட்டி போட்டு அள்ளிய பக்தர்கள்

Update: 2024-12-16 03:00 GMT

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தேரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலான கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, புனித மணலை எடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான கள்ளர் வெட்டுத் திருவிழா கடந்த நவம்பர் 16ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 30 நாட்கள் அய்யனாருக்கு பல்வேறு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முளைப்பாரி, பால்குட ஊர்வலம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு திருவிழா கோயில் பின்புறமுள்ள தேரி குன்றில் நடைபெற்றது. மேள, தாளங்கள் முழங்க கள்ளராக பாவித்து எடுத்து வந்த செவ்விள நீரை பூசாரி அரிவாளால் வெட்டினார். அந்த இளநீர் பட்ட மணலை பக்தர்கள் புனித மணலாக கருதி, போட்டி போட்டு கொண்டு அள்ளி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்