விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டாள் சன்னதி, நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதி ஆகியவற்றில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.