மதுரை | விசிக கொடிக்கம்பம் அருகே கூடுதல் கட்டிடம்: வருவாய்த் துறை நோட்டீஸை கண்டித்து தர்ணா
மதுரை ஆதனூர் கிராமத்தில் கொடிக்கம்பத்தை அகற்றக் கோரி வருவாய்த்துறை அனுப்பிய நோட்டீஸ்க்கு எதிராக வி.சி.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் உள்ள வி.சி.க. கொடிக்கம்பம் அருகே அம்பேத்கர் படிப்பகம் என்ற பெயரில் வி.சி.க.வினர் புதிய கட்டிட தளம் அமைத்ததாக கூறப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்ததோடு, படிப்பகத்தை கட்டுவதாக சுட்டிக்காட்டிய வருவாய்த்துறை, அதனை உடனடியாக அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிருப்தி அடைந்த வி.சி.க.வினர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மதுரை வெளிச்சநத்தத்தில் வி.சி.க.வினர் கொடியேற்ற அனுமதி கொடுத்ததற்காக வருவாய் துறைனர் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.