வியாபாரிகள் கேட்ட கேள்வி.. திரும்பி பார்க்காமல் ஒடிய பெண் அதிகாரி - பெருங்களத்தூரில் பரபரப்பு

Update: 2024-12-16 03:08 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில், கொசு ஒழிப்பான் பொருட்களை பறிமுதல் செய்ய முயன்ற வேளாண் துறை பெண் அதிகாரி, வியாபாரிகளின் எதிர்ப்பால் கிளம்பிச் சென்றார். பிரபல சூப்பர் மார்க்கெட்டில் கொசு ஒழிப்பான் பொருட்களை உரிய அனுமதி இல்லாமல் விற்பதாக கூறி, வேளாண்மை துறை உதவி இயக்குனர் கடைக்குள் நுழைந்து பறிமுதல் செய்ய முயன்றார். இதையறிந்த வியாபாரிகள் சங்கத்தினர் பெண் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரியுடன் வந்த நபரிடம் அடையாள அட்டையை வியாபாரிகள் கேட்ட நிலையில், அவர் செய்வதறியாது திகைத்தார். வியாபாரிகளின் கடுமையான எதிர்ப்பால் பறிமுதல் செய்ய வந்த பெண் அதிகாரி, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். முறைப்படி அறிவிக்காமல் பணம் பறிக்கும் நோக்கில் அதிகாரி வந்ததாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்