அரிவாள் வைத்து மிரட்டிய பேப்பர் ரவுடிகள் - கண்கலங்க கதறும் முதியவர் - வைரல் காட்சி

Update: 2025-01-10 03:44 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே 75 வயதான முதியவரை ஒருவர் அரிவாள் வைத்து மிரட்டும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லால்குடி வட்டம் சித்தி விநாயகர் கோயில் உபயதாரரான தேவராஜன் என்பவருக்கும் கோயில் அருகாமையில் வசிக்கும் நபருக்கும் இடத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் , ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் உள்ள உள்ள டீக்கடையில் அமர்ந்திருந்த தேவராஜனை அந்த நபர் அரிவாள் காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தேவராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் , சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்