சென்னையில் பெரிய சூட்கேசுடன் நின்ற நபரை பிடித்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னை பள்ளிக்கரணையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பள்ளிக்கரணை வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள கல்லூரி அருகே மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த சாலையில் பெரிய சூட்கேசுடன் நின்று கொண்டிருந்த விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த உடி சத்யபாபுவை பிடித்து போலீசார் சோதனை செய்ததில் கஞ்சா சிக்கியது. அவரை கைது செய்து விசாரித்ததில், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவந்ததாக ஒப்புக்கொண்டார்.