திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உதவித்தொகை வழங்குவதற்கு முதியவர்களிடம் தலா 50 ரூபாய் பிடித்தம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த விஜயகுமார், கடந்த 5 வருடங்களாக பேங்க் ஆப் பரோடாவின் கஸ்டமர் சர்வீஸ் என்ற பெயரில் கிராம மக்களுக்கு முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். இந்த சூழலில், ஓய்வூதியம் வழங்கும்போது ஆயிரம் ரூபாய்க்கு 50 ரூபாய் என பிடித்தம் செய்து வழங்குவதாக புகார் அளித்துள்ள பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.