பரமபத வாசலை கடந்த ரங்கநாதர்.. திறக்கப்பட்ட சொர்க்கவாசல் - பிரமிக்க வைக்கும் காட்சி
மதுரை அருகே அழகர்கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில் பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய சுந்தர ராஜ பெருமாளை பக்தர்கள் பெரும் திரளாக சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளே உள்ள தில்லை திருச்சித்திரக்கூடம் கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருநாளினை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பில், திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர். வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்
வைகுந்த வாயில் திறக்கப்பட்டு, ஆயிரக்காணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட பின், கருட வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தரிசனம் முடித்து பரமபத வாசல் வழியாக வெளியில் வந்த பக்தர்களுக்கு ஒரு லட்சத்து 8 லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.