கொடுத்த மிக மிக முக்கிய பொறுப்பு..சட்டப்பேரவையில் உதயநிதிக்கு கொடுத்த அந்த சீட் | Udhayanidhi Stalin

Update: 2024-12-09 10:50 GMT

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமரும் பகுதியில் 3வது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு முதல் வரிசையில் 10வது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் மூன்றாவது இடம் அளிக்கப்பட்டது. இதன்படி முதலமைச்சர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்