கருக்கலைப்புக்கு மறுத்ததால் சிறுமி பலி? - மருத்துவர் மீதான வழக்கு..- கோர்ட் அதிரடி
திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் செண்பகலட்சுமி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில், கர்பமாக இருந்த 17 வயது சிறுமி ஒருவரை சுதர்சனா மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்கு கருக் கலைப்பு செய்ய கோரிய நிலையில், மருத்துவர் செண்பகலட்சுமி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அந்த சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான ராம்குமார், சிறுமியின் உறவினர்.
மீனாட்சி மற்றும் மனுதாரர் செண்பகலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியின் உடற்கூராய்வில் ரத்தப்போக்கு காரணமாக சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தாலும், அரசு தரப்பில் மனுதாரர் மீது எத்தகைய குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என்றார். இந்த வழக்கில் மனுதாரருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளின் பிரிவுகள் பொருந்தாது என்பதால் அவர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.