விவசாயிகளின் தலையில் இடியை இறக்கிய இயற்கை..மனம் நொந்து வைத்த கோரிக்கை | Farmers | Tamilnadu

Update: 2025-01-08 13:12 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் கருகி வரும் மாம்பூக்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 34 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மாமரங்களில் பூக்கள் வைக்கும் நேரத்தில், பனிபொழிவு மற்றும் பூச்சி தாக்குதல்களால் மாம்பூக்கள் கருகியும், இலைகள் சுருங்கியும் வருகிறது. பலமுறை மருந்து தெளித்தும் எந்த பயனும் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வேளான் அதிகாரிகள் ஆய்வு மேற்கோண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்