ஆயுள் தண்டனை கைதியின் அறையில் சிக்கிய செல்போன்.. - சேலம் மத்திய சிறையில் பரபரப்பு..

Update: 2025-01-08 13:03 GMT

சேலம் மத்திய சிறையில் ஆயுள்தண்டனை பெற்ற கைதியின் அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அவரை அவரது உறவினர்கள் சந்திக்க மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதியான ராஜு என்பவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது அறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்