ஒன்று கூடிய பாஜகவினர்..குவிக்கப்பட்ட போலீஸ்..உச்சகட்ட பரபரப்பில் சென்னை | BJP | Chennai
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். பாஜக இளைஞரணியை சேர்ந்த சிலர், மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அருகே, யார் அந்த சார் என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாயில் துணியை கட்டியபடி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த போலீசார், தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.