`பல நாள் குமுறல்..' இன்று வெடித்த பூகம்பம் - அசத்தலாக செயல்பட்ட போலீஸ்

Update: 2024-11-07 05:20 GMT

தென்காசியில், ஆடு அறுக்கும் நிலையத்தை மூட வலியுறுத்தி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட சொர்ணபுரம் மேட்டு தெருவில் செயல்பட்டு வரும் ஆடு அறுக்கும் நிலையத்தில், வியாபாரிகள் கழிவுகளை போட்டுவிட்டு சென்று விடுவதால் அந்த பகுதியில் நோய் தொற்று ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், தற்போது அதே இடத்தில் புதிய ஆடு அறுக்கும் நிலையத்தை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்தும், ஆடு அறுக்கும் நிலையத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்திய நிலையில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்