சென்னை திருவொற்றியூர் பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக வாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவத்துறை அறிக்கையில் மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளியின் உள் பகுதி, வெளிப்பகுதியில் தொடர்ந்து காற்று மாசின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் காற்று மாசுக்கான தடயம் இல்லையென இதுவரை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சுற்றுவட்டார பகுதிகளிலும், அருகில் உள்ள வீடுகளிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வாயு கசிவிற்கான வாய்ப்பில்லை என்றே கூறப்படுகின்றது. இந்த நிலையில், மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு, திங்கள் கிழமை மீண்டும் பள்ளியை திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.