பள்ளிவாசல் இடுகாட்டில் இறந்த தாயின் உடலை வைத்து - பரபரப்பை கிளப்பிய இரு ஜமாத்தார்கள்

Update: 2024-11-07 06:02 GMT

பேட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பிரமுகர் ஒருவரின் தாய் இஸ்மாயில் பீவி செவ்வாய்க்கிழமை இறந்துள்ளார். அவரது உடலை, அங்கு உள்ள பள்ளிவாசல் இடுகாட்டில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வழக்கப்படி அடக்கம் செய்ய வேண்டும் என உறவினர்கள் தெரிவித்த நிலையில், உள்ளூர் ஜமாத் வழக்கப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று உள்ளூர் ஜமாத்தார்கள் தெரிவித்தனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை உருவானது. இதையடுத்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வை நாடி, உரிமை பெற்றனர். அதன் அடிப்படையில், வட்டாட்சியர், டிஎஸ்பி உள்ளிட்டோர் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தொழுகை நடத்தி, முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்