தமிழகத்திலிருந்து சென்ற தீபாவளிலட்டு..சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ச்சி-லட்டுக்குள்ளஇவ்ளோ வில்லங்கமா?
கன்னியாகுமரியில் இருந்து சிங்கப்பூருக்கு பேரிச்சம் பழம் லட்டு வாங்கிச் சென்றவர், சிங்கப்பூரில் இறங்கிய அடுத்த கணமே உணவு பாதுகாப்புத் துறைக்கு போன் செய்து அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடந்தது ?.. பார்க்கலாம் விரிவாக...
“அவ்ளோதான் முடுச்சு விட்டாங்க போங்க“.. என உணவு சம்பந்தமான பூதாகர செய்திக்கிடையே.. “இருங்க பாய்“ என லிஸ்டில் மேலும் ஒரு பகீர் சம்பவம் வந்து சேர்ந்திருக்கிறது...
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அடுத்த ஆலங்கோடை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்..
கடந்த சில தினங்களுக்கு முன், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் வந்த அவர், பண்டிகையை சிறப்பித்து விட்டு மீண்டும் சிங்கப்பூருக்கே கிளம்பிய நிலையில், நித்திரவிளை சந்திப்பில் உள்ள பிரபல தனியார் பேக்கரி கடையில் இருந்து பேரிச்சம் பழ லட்டை வாங்கிச் சென்றிருக்கிறார்...
இந்த லட்டில்தான் ஒட்டுமொத்த வில்லங்கமும்...
சிங்கப்பூர் சென்று பேரிச்சம் பழ லட்டு பொட்டலத்தை பிரித்து பார்த்த அவர், லட்டுக்குள் கிடந்த எலி வாலை கண்டு கதி கலங்கி போயிருக்கிறார்...
அதிர்ஷ்டவசமாக லட்டை யாரும் சாப்பிடாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை...
இதனையடுத்து, சுகாதாரமற்ற முறையில் தரக்குறைவாக பண்டங்களை தயாரித்து விற்றதாக கூறி உடனடியாக சம்பந்தப்பட்ட பேக்கரி கடை மீது, அவர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது....